பல அரசியல் வாதிகளை சிறைக்கு அனுப்ப வேண்டும்!! -ஆணை கேட்கும் அநுர குமார- - Yarl Thinakkural

பல அரசியல் வாதிகளை சிறைக்கு அனுப்ப வேண்டும்!! -ஆணை கேட்கும் அநுர குமார-

நாட்டில் உள்ள முக்கிய அரசியல்வாதிகள் பலர் சிறைச்சாலையில் இருக்க வேண்டியவர்கள் என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். 

நாட்டின் முக்கிய பிரச்சினைகளுக்கு இந்த அரசியல்வாதிகளே காரணம், இவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

குருநாகலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

2015ஆம் ஆண்டு  நாங்கள் மஹிந்த ராஜபக் அரசாங்கத்தை தோற்கடித்து புதிய அரசாங்கத்தை உருவாக்க வாக்களித்தோம்.

இருப்பினும் தேர்தலுக்குப் பிறகும் இதற்கு முற்பட்ட காலங்களில் காணப்பட்ட அரசாங்கத்தைத்தான் காணக்கூடியதாக இருந்தது.

மக்களாகிய நீங்கள் ஐக்கிய தேசிய கட்சியை தோற்கடித்து  கோட்டாபய தலைமையில் புதிய அரசாங்கத்தை உருவாக்க நினைப்பது தவறு. காரணம், நல்லாட்சி அரசாங்கத்தை சேர்ந்தவர்களில் பெரும்பாலோனர்களே தற்போது கோட்டாவுடன் இணைந்துள்ளார்கள். ஆகையால் புதியதொரு மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்றார்.

Previous Post Next Post