சமூக வலைத்தளங்களுக்கு ஊடுறுவல் எச்சரிக்கை!! - Yarl Thinakkural

சமூக வலைத்தளங்களுக்கு ஊடுறுவல் எச்சரிக்கை!!

நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போது பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்களின் ஊடுறுவல் ஏற்படலாம் என்று தகவல் தொழில்நுட்ப பிரிவு எச்சரிக்கை செய்துள்ளது.

எனவே நாட்டு மக்கள் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் மிகுந்த அவதானமாக இருக்குமாறும் அப்பிரிவு மேலும் கேட்டுக் கொண்டுள்ளது.

சமூக வலைத்தளங்கள் ஊடுறுவல் தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின pநச.வைளளட@பஅயடை.உழஅ என்ற முகவரிக்கு தகவல் தர முடியும் என்றும் அப்பிரிவு மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் சமூக வலைத்தள பயனாளர்களின் கணக்குகளில் ஊடுறுவலாம் அல்லது வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்த கூடும் என்பதனால் முறைப்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் ளஉசநநளொழவள மற்றும் உரிய டiமெ ஆகியவற்றை முறைப்பாட்டுடன் இணைத்து அனுப்புமாறு இலங்கை பயனாளர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Previous Post Next Post