நீராவியடியில் விசேட பூயை!! -குளம்பம் விளைவித்தவரை பாதுகாத்த பொலிஸ்- - Yarl Thinakkural

நீராவியடியில் விசேட பூயை!! -குளம்பம் விளைவித்தவரை பாதுகாத்த பொலிஸ்-

முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்ட துர் சம்பவத்தால் ஏற்பட்ட பீடையை போக்க குறித்த ஆலயத்தில் விசேட சாந்தி பூயை இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோவில் வளாகத்தில், விசேட சாந்தி பூசை நிகழ்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை, அந்தப்பகுதிக்கு வந்த சிங்களவர் ஒருவர், அச்சுறுத்தும் வகையில் புகைப்படம் எடுத்தார்.

கோவில் வளாகத்தில் போலீஸ ;பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையில், நீராவியடிப்பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர் மற்றும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் ஆகியோர், போலீஸாரிடம் குறித்த நபரின் அச்சுறுத்தல் செயற்பாடுகுறித்து முறையிட்டபோதும், போலீஸார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததைக் காணக்கூடியதாகவிருந்தது.

இதனால் அங்கு வழிபாடுகளுக்காக வந்த தமிழ் மக்களுக்கும், குறித்த நபருக்குமிடையில் வாக்குவாதங்கள் இடம்பெற்றன.

இதன்போது அங்கு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த போலீஸார், குறித்த நபருக்கு ஆதரவாக செயற்பட்டதுடன், தமிழ்மக்களை விலகுச்செல்லுமாறு கூறியதைக் காணக்கூடியதாகவிருந்தது.
Previous Post Next Post