பல்கலை மாணவர்கள் - தமிழ் கட்சிகள் சந்திப்பு ஆரம்பம்!! - Yarl Thinakkural

பல்கலை மாணவர்கள் - தமிழ் கட்சிகள் சந்திப்பு ஆரம்பம்!!

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது நிலைப்பாடொன்றை தமிழ் தேசிய கட்சிகளிடையே இணக்கம் ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் ஏற்பாட்டில் நடத்தப்படும் கலந்துரையாடல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள ப்றைட் இன் விருந்தினர் விடுதியில் குறித்த சந்திப்பு தற்போது நடைபெற்று வருகின்றது.

யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தாத்தன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளரும், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், அதன் ஊடக பேச்சாளர் க.அருந்தவபாலன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செ.கஜேந்திரன் மற்றும் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன், சட்டத்தரணி க.சுகாஸ் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோரும், ரெலோ அமைப்பின் செயலாளரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ந.சிறீகாந்தா, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா. குகதாஸ் ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எஃவ் சார்பில் அதன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பொது அமைப்புகளின் சார்பில் கிருஸ்தவ மதகுரு ஒருவரும், சின்மிய மிசன் வதிவிட ஆச்சாரி சிதாகானந்தா சுவாமிகளும், யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன்,  யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன், யாழ்.பல்கலைக்கழக அரசறிவியற்றுறைப் பேராசிரியர் கே. ரி.கணேசலிங்கம், அரசியல் ஆய்வாளர் அ.ஜோதிலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

Previous Post Next Post