கோட்டாவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!! - Yarl Thinakkural

கோட்டாவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!!

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலைக்கு கோட்டாவே பதில் கூற வேண்டும் என்று அமெரிக்கா நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா - கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் சிவில் வழக்காக குறித்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை செய்யப்பட்டதற்கு அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ச பொறுப்புக் கூற வேண்டும் எனவும் அது தொடர்பில் தனக்கு நட்ட ஈடு பெற்றுத் தருமாரு கோரியும் கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றில் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க குறித்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

கோட்டாபய ராஜபக்ச அமெரிக்காவிற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே குறித்த வழக்கை தள்ளுபடி செய்வதாக கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றம் அறிவித்துள்ளது.
Previous Post Next Post