பிரபாகரனின் பெற்றோரை நான்தான் காப்பாற்றினேன்!! -கூறுகிறார் கோட்டா- - Yarl Thinakkural

பிரபாகரனின் பெற்றோரை நான்தான் காப்பாற்றினேன்!! -கூறுகிறார் கோட்டா-

இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பெற்றோரை நானே காப்பாற்றினேன் என்று ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ச தெரிவித்தார்.

பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே மேற்படி விடயத்தை கோட்டா தெரிவித்துள்ளார்.

அந்த நேர்கானலில் “இறுதி யுத்தத்தின் போது புலித் தலைவர்கள் சரணடைந்ததாக கூறப்படுகின்றது” தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த கோட்டா: வெள்ளைக்கொடி ஏந்தி வந்ததை எங்காவது காணொளியில் பார்த்துள்ளீர்களா? அதிகாலை நான்கரை மணிக்கே வருபவர் யார் என்று கூட தெரியாது. பிரபாகரனின் தாய் தந்தையரை நாம் காப்பாற்றினோம். ஆனால் அவர்கள் பிரபாகரனின் பெற்றோர்கள் என எமக்கு தெரியாது.

பொட்டு அம்மான் எவ்வாறு இருந்தார் என யாருக்கும் தெரியாது. ஒரு இராணுவ வீரருக்கு பொட்டு அம்மான் யார் என்று தெரியுமா? பொட்டு அம்மானை என்னால் கூட அடையாள காண முடியாது. பிரபாகரனை கூட அடையாளம் காண முடியாது. அதனால் தான் பிரபாகரனை அடையாளம் காண அங்கு கருணாவை அனுப்பினோம் என்று தெரிவித்தார்.
Previous Post Next Post