மட்டுவிலில் வீட்டிற்குள் புகுந்து வாள்வெட்டுக் குழு அட்டகாசம்!! - Yarl Thinakkural

மட்டுவிலில் வீட்டிற்குள் புகுந்து வாள்வெட்டுக் குழு அட்டகாசம்!!

தென்மராட்சி மட்டுவில் - சந்திரபுரம் பகுதியில் உள்ள வீட்டிற்குள் அத்துமீறி புகுந்த வாள்வெட்டுக் குழு அங்கிருந்த பொருட்களை அடித்து நொருக்கி நாசவேலையில் ஈடுபட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை குறித்த வீட்டிற்குள் புகுந்த 4 பேர் கொண்ட குழு வீட்டின் கதவு வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேட்டார் சைக்கிள் உட்பட வீட்டின் ஐன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொருக்கியுள்ளது.

இதனையடுத்து வீட்டில் இருந்தவர்கள் கூக் குரல் எழுப்பியதனையனுத்து குறித்த ஆயுதக் கும்பல் தப்பித்துச் சென்றுள்ளதாக தெரிவுக்கப்படுகிறது. இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post