வேம்படி பாடசாலைக்கு குண்டுத் தாக்குதல் எச்சரிக்கை!! - Yarl Thinakkural

வேம்படி பாடசாலைக்கு குண்டுத் தாக்குதல் எச்சரிக்கை!!

யாழ்.வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் ஒரு மாதத்திற்குள் குண்டு வெடிக்கும் என்று எச்சரிக்கை செய்யப்பட்ட கடிதம் அனுப்பிவைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குறித்த பாடசாலையின் முன்னாள் அதிபரின் பெயரிடப்பட்டு அநாமதேயக் கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

திகதியிடப்படதாத அந்தக் கடிதத்தில் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இன்னும் ஒரு மாதத்தில் குண்டு வெடிக்கும் என்று ஆங்கில மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேம்படி பாடசாலை முன்னாள் அதிபர் வேணுகா சண்முகரத்தினம் என்ற பெயரில் பாடசாலை விலாசம் இடப்பட்டு வந்துள்ள அநாமதேயக் கடிதம் தொடர்பில் அவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

முறைப்பாட்டாளரான பாடசாலை முன்னாள் அதிபர் ஓய்வு பெற்றுச் சென்றதை அறிந்திருந்த உரிய தாபால் உத்தியோகத்தர் அவர் இருக்கும் கொக்குவில்  பகுதிக்குச் சொல்லும் தாபல் உத்தியோகத்தரிடம் அந்தக் கடிதத்தைக் கொடுத்துவிட்டுள்ளார்.

இன்று காலை அவர் முன்னாள் அதிபரின் வீட்டுக்குச் சென்ற போது, அங்கே எவரும் இல்லாததால் கடிதத்தை  படலையால் போட்டுவிட்டு வந்துள்ளர்.

இன்று மதியம் வீடு வந்த முன்னாள் அதிபர் கடிதத்தைப் பார்த்துவிட்டு  யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு வழங்கினார்.

Previous Post Next Post