யாழில் தனித்திருந்த வயோதிபப் பெண் கொலை!! - Yarl Thinakkural

யாழில் தனித்திருந்த வயோதிபப் பெண் கொலை!!

யாழ்.கோண்டாவில் - நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோவிலடியில் உள்ள வீட்டில் தனியாக இருந்த வயோதிபப் பெண் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

61 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு இன்று திங்கட்கிழமை காலை வீட்டு வளவிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

இந்தக் கொலை நேற்றிரவு இடம்பெற்று இருக்கலாம் தெரிவிக்கும் பொலிஸார், கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்று தெரிவித்தனர். சம்பவ இடத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Previous Post Next Post