ஆனையிறவில் காலை கோர விபத்து!! -ஒருவர் பலி- - Yarl Thinakkural

ஆனையிறவில் காலை கோர விபத்து!! -ஒருவர் பலி-

ஆனையிறவு பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளனர்.

மேலும் இவ்விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து இன்று அதிகாலை மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த இரண்டு லொறி வாகனங்களுடன் கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி பயணித்த ஹயஸ் ரக வேன் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இச் சம்பத்தில் வேன் சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதோடு, லொறி சாரதி மற்றும் ஹயஸ் வாகனத்தில் பயணித்த நபர் ஒருவரும் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post