யாழ் சர்வதேச விமான நிலையம் மக்கள் பாவனைக்கு!! - Yarl Thinakkural

யாழ் சர்வதேச விமான நிலையம் மக்கள் பாவனைக்கு!!

வடக்கின் நுழைவாயிலாக திகழும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று உத்தியோக பூர்வமாக திறக்கப்பட்டு பொது மக்களின் பாவனைக்காக விடப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புணரமைக்கப்பட்ட குறித்த விமான நிலையத்தை இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் அர்ஜின ரணதுங்க மற்றும் இந்திய தூதுவர் ஆகியோல் இணைந்து விமான நிலையத்தை திறந்து வைத்தனர்.

மேலும் இந்நிகழ்வில் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன், ஈ.சரவணபவன், தமர்மலிங்கம் சித்தாத்தன், வடக்கு மாகாண சபையின் பேரவைத் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம், யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனால்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post