யாழில் வழிப்பறி கொள்ளை!! -இளைஞர் கைக்குண்டுடன் கைது- - Yarl Thinakkural

யாழில் வழிப்பறி கொள்ளை!! -இளைஞர் கைக்குண்டுடன் கைது-

யாழ்ப்பாணம் நகரப் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிக நீண்டகாலமாக வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுபட்டுவந்த இளைஞன் கைக்குண்டுடன் யாழ்.பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஜமேசன் அஜந்தன் (வயது 21) என்ற இளைஞனே நேற்றுக் கைது செய்யப்பட்டார்.

வழிப்பறிக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார் என்ற குற்றச்சாட்டில் பல முறைப்பாடுகளின் அடிப்படையில் இனங்காணப்பட்ட இளைஞனை பொலிஸார் தேடி வந்த நிலையில் நேற்று அவர் யாழ்ப்பாணம் சிறப்பு பொலிஸ் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Previous Post Next Post