கிளிநொச்சியல் பொலிஸ் துப்பாக்கிச் சூடு!! - Yarl Thinakkural

கிளிநொச்சியல் பொலிஸ் துப்பாக்கிச் சூடு!!

கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த மதுவரி திணைக்கள உத்தியோத்தரின் ஜீப் ரக வாகனத்தின் மீது நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் மதுவரி திணைக்கள அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலுக்கமைவாக குறித்த ஜீப்ரக வாகனத்தை நிறுத்துமாறு பொலிஸார் கட்டளையிட்டுள்ளனர். இருப்பினும் பொலிஸாரின் கட்டளையை மீறி ஜீப்ரக வாகனத்தின் சாரதி வாகனத்தை செலுத்தியுள்ளார்.

இதன்போது பொலிஸாரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர் தற்போது கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

Previous Post Next Post