கோட்டாவின் விக்கெட்டுக்களை சரிக்கும் சஜித்!! - Yarl Thinakkural

கோட்டாவின் விக்கெட்டுக்களை சரிக்கும் சஜித்!!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்க உறுப்பினர்கள் பலர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் 76 பேர் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ ஆதரவு வழங்க இணக்கம் வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் மங்கள சமரவீரவின் வீட்டில் சஜித் பிரேமதாஸவை சந்தித்த சுதந்திர கட்சி உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதிநிதிகள் இந்த சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

தேர்தல் பிரிவு மட்டங்களில் தனக்கு ஆதரவு வழங்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதிநிதிகளுடன் மீண்டும் சந்திப்பு ஒன்றை நடத்துவதாக சஜித் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, பொதுஜன பெரமுனவுடன் இணைந்திருந்தது.

இந்நிலையில் மாவட்ட மட்டத்திலான சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சஜித்திற்கு ஆதரவு வழங்கியுள்ளமை, மஹிந்த அணிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post Next Post