கூட்டமைப்பு சஜித்தையே ஆதரிக்கும்!! -அடித்து கூறுகிறார் சிவாஜிலிங்கம்- - Yarl Thinakkural

கூட்டமைப்பு சஜித்தையே ஆதரிக்கும்!! -அடித்து கூறுகிறார் சிவாஜிலிங்கம்-

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவையே ஆதரிக்கும் என்று, முன்னாள் மீன் சின்னத்தில் சுயேட்சையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எம்.கே.சிவாஜிலிங்கம் உறுதிபடத் தெரிவித்தார்.

தேர்தல் முடிந்த பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயர் ஜக்கிய தேசியக் கட்சியின் தமிழ் பிரிவு என்று மாற்றப்பட்டாலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதிய ஒன்றில் இன்று வியாழக்கிழமை நண்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
ஜனாதிபதி தேர்தலில் எந்த தரப்பிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்குவது என்று இதுவரை முடிவு செய்து அறிவிக்கவில்லை.

தேர்தல் நடைபெறுவதற்கு 15 நாட்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் சஜித் பிரேமதாசாவை தாங்கள் ஆதரிப்பதாக அறிவிப்பார். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே என்றார்.
Previous Post Next Post