பதவியில் இருக்கும் போதே மரண தண்டனை அமுல்!! -மைத்திரி அதிரடி- - Yarl Thinakkural

பதவியில் இருக்கும் போதே மரண தண்டனை அமுல்!! -மைத்திரி அதிரடி-

எனது பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் மரண தண்டனையை அமுலாக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஹில்டன் விடுதியில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் தேசிய இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

போதைப்பொருள் நாட்டின் பெரும் பிரச்சினையாக உள்ளது. அதனை தடுப்பதற்கு, போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை அமுலாக்க தாம் நடவடிக்கை எடுத்தாலும், அந்த தீர்மானத்தை ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் இந்த வழக்கு மீள விசாரணைக்கு வருகிறது. இதன்போது நீதிமன்றம் அனுமதி வழங்குமாக இருந்தால், தாம் தமது பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னதாக, மரண தண்டனையை அமுலாக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post Next Post