நீராவியடி விவககரம்!! -ஞானசார தேரர் உள்ளிட்ட 3 பேருக்கு அழைப்பாணை- - Yarl Thinakkural

நீராவியடி விவககரம்!! -ஞானசார தேரர் உள்ளிட்ட 3 பேருக்கு அழைப்பாணை-

முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் குறித்த விசாரணைகளுக்காக ஞானசார தேரர் உள்ளிட்ட 3 பேருக்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

நீராவியடியில் உள்ள ஆக்கிரமிப்பு புத்தவிகாரையில் இருந்த பௌத்த பிக்கு உயிரிழந்த நிலையில், முல்லைத்தீவு நீதிமன்றம் விதித்த கட்டளையை மதிக்காமல் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இச் சம்பவம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜாவின் பெயரில், எம்.ஏ.சுமந்திரனால் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம் ஞானசார தேரர் உள்ளிட்ட 3 பேரை எதிர்வரும் 8 ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை பிறப்பித்துள்ளது.
Previous Post Next Post