35 வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டது!! - Yarl Thinakkural

35 வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டது!!

ஜனாதிபதி தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இரண்டு எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவ்வெதிர்ப்புகள் நிராகரிக்கப்பட்டு தாக்கல் செய்த அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று காலை 9 மணி முதல் 11 மணி வரையில் இடம்பெற்றது.

அதனடிப்படையில் 35 பேர் 2019 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தலிற்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

41 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்த நிலையில் அதில் 35 பேர் மாத்திரமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

சமல் ராஜபக்ஷ மற்றும் குமார வெல்கம உட்பட 6 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்த போதிலும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post