ஊடகங்களுக்கு கடும் எச்சரிக்கை!! -பக்கச்சார்பாக நடந்தால் 3 வருட சிறை- - Yarl Thinakkural

ஊடகங்களுக்கு கடும் எச்சரிக்கை!! -பக்கச்சார்பாக நடந்தால் 3 வருட சிறை-

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போது ஊடகங்கள் தாம் விரும்புக் கட்சிகளுக்கு சார்பாக செய்திகளை வெளியிட்டு, பொது மக்களை திரை திருப்பும் பிரச்சாரங்களை மேற்கொள்ளப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய எச்சரிக்கை செய்துள்ளார். 

இவ்வாறான செய்தி வெளியிடுபவர்களுக்கு 3 வருட சிறைத்தண்டணையும், ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணமும் அறவிடப்படும் என்றும் ஆணைக்;குழு மேலும் எச்சரிக்கை செய்துள்ளார்.

அரச மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் தாம் விரும்பும் கட்சிகளுக்கு சார்பாக பொதுமக்களை திசை திருப்பும் தவறான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவது இனங்காணப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 19 வது அரசியல் திருத்த சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

இன்று முதல் ஒரு வார காலம் தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளில் வெளியிடப்படும் செய்திகள் உட்பட ஊடகங்களின் செயற்பாடுகள் கண்காணிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தன்னிச்சையாக செயற்படும் ஊடகங்கள் மீது வழக்கு தொடரப்பட்டு, மூன்று வருட சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணமும் அறிவிடப்படும் என எச்சரித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்ரிய இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
Previous Post Next Post