யாழில் காந்தியின் 150 பிறந்த தின நிகழ்வு!! - Yarl Thinakkural

யாழில் காந்தியின் 150 பிறந்த தின நிகழ்வு!!

மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தின நிகழ்வுகள் இன்று காலை யாழ்.இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நடந்தது.

யாழ்.ஆஸ்பத்திரி வீதியில் உள்ள காந்தியின் நினைவு தூபியில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதன் போது காந்தியின் உருவச்சிலைகள் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பலரும் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் காந்தி பாடலும் இசைக்கப்பட்டது.


இந் நிகழ்வில் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட், வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் உள்ளிட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், தூதரக அதிகாரிகள் கல்விமான்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்

Previous Post Next Post