நீதிமன்ற கட்டளையை மீறி பிக்குவின் உடல் தகனம்!! -நீராவியடியில் பிக்குகள் அட்டகாசம்- - Yarl Thinakkural

நீதிமன்ற கட்டளையை மீறி பிக்குவின் உடல் தகனம்!! -நீராவியடியில் பிக்குகள் அட்டகாசம்-

முல்லைத்தீவு நீதிமன்ற உத்தரவையும் மதிக்காமல் பௌத்த பிக்குவின் உடல் நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் அடாத்தாக தகனம் செய்யப்பட்டுள்ளது.

அப் பகுதிக்கு இன்று திங்கட்கிழமை ஒன்று கூடியிருந்த பௌத்த பிக்குகள் மற்றும் சிள்கள மக்களினாலேயே நீதிமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட கட்டளை சில மணித்தியாலங்களிலேயே மீறப்பட்டு பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கையினை தடுத்து நிறுத்துமாறு சட்டத்தரணிகளான கே.சுகாஸ், வி.மணிவண்ணன் ஆகியோர் பொலிஸாரிடம் கேட்டுக் கொண்ட போதும் பௌத்த பிக்குவின் உடல் தகன் செய்யப்பட்டுள்ளது.

Previous Post Next Post