பிக்குவின் உடல் தகன எதிர்பு: சட்டத்தரணி சுகாஸ் மீது சிங்களவர்கள் தாக்குதல்!! - Yarl Thinakkural

பிக்குவின் உடல் தகன எதிர்பு: சட்டத்தரணி சுகாஸ் மீது சிங்களவர்கள் தாக்குதல்!!

முல்லைத்தீவு நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை காலை வளங்கிய உத்தரவை மதிக்காமல் நீராவியடி பிள்ளையார் ஆலய சூழலில் பிக்குவின் உடல் தகனம் செய்யப்படுவதை கண்டித்து அங்கிருந்து எதிர்ப்பு தெரிவித்த சட்டத்தரணி கே.சுகாஸ் மீது சிங்களவர்களால்  மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவத்தை கண்டித்து முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் பகீஸ்கரிப்பில் தற்போது இறங்கியுள்ளனர்.

நீதிமன்ற தீர்ப்பினை மீறி பொலிஸார் முன்னிலையில் பிக்குவின் உடலை நல்லடக்கம் செய்வதற்கு பௌத்த பிக்கள் முயற்சித்ததை தட்டிக் கேட்டதற்காக சிங்கள காடையர்கள் சிலர் சட்டத்தரணி சுகாஸ் மீது தாக்குதல் நடாத்தியிருக்கின்றனர்.
Previous Post Next Post