கோட்டாவுக்க எதிராக யாழில் போராட்டம்!! - Yarl Thinakkural

கோட்டாவுக்க எதிராக யாழில் போராட்டம்!!

பொதுஜன பரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோட்டாபாய ராஜபக்சவிற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக முன்னிலை சோசலிசக் கட்சியின் ஏற்பாட்டில் இப் போராட்டம் நடந்தது.

.நேற்று நண்பகல் 12 மணியளவில் அங்கு வந்து ஒன்று கூடியவர்கள் காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பான தகவல்களை வெளியிட கோரி வலியுறுத்தியதுடன், மஹிந்த, கோட்டாபாய ராஜபக்சவிற்கு எதிரான கோசங்களையும் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Previous Post Next Post