இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் யாழ்.இந்துக் கல்லூரி அதிபர் கைது!! - Yarl Thinakkural

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் யாழ்.இந்துக் கல்லூரி அதிபர் கைது!!

யாழ்.இந்துக் கல்லூரி அதிபர் உள்ளிட்ட வேறு சில பாடசாலை அதிபர்கள் பலர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து வருகை தந்த அதிகாரிகள், இன்று புதன்கிழமை பாடசாலை அதிபர்களைக் கைது செய்தனர்.

பாடசாலை மாணவர் அனுமதிக்கு கையூட்டுப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் புலன் விசாரணைகளை முன்னெடுத்த இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாட்டுதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, அந்தப் பாடசாலையின் அதிபரை இன்று கைது செய்தது.

அத்துடன், மேலும் சில பாடசாலை அதிபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post