வல்லை நீர் தரவையில் சடலம் கண்டுபிடிப்பு!! - Yarl Thinakkural

வல்லை நீர் தரவையில் சடலம் கண்டுபிடிப்பு!!

யாழ்.வல்லைவெளி பகுதியில் உள்ள நீர் தரவையில் உயிரிழந்த ஒருவருடைய சடலம் இன்று புதன்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டிக்கப்பட்டுள்ளது.

வல்லை முனியப்பர் கோவிலுக்கும், இராணுவ முகாமிற்கும் இடையில் உள்ள நீர் தரவையிலேயே அந்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள சடலம் இதுவரை மீட்கப்படவில்லை. அடையாளமும் காணப்படவில்லை. குறித்த சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Previous Post Next Post