யாழ்.பல்கலை ஊழியர்கள் நடைபவணி போராட்டத்தில்!! - Yarl Thinakkural

யாழ்.பல்கலை ஊழியர்கள் நடைபவணி போராட்டத்தில்!!

யாழ்.பல்கலைக்கழக ஊழியர்கள் கடந்த 10 நாட்களாக சம்பள உயர்வு உட்பட பல்;வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி நடத்திவரும் வேலைநிறுத்தம போராட்டத்தின் அடையாளமாக இன்று வெள்ளிக்கிழமை காலை மாபெரும் நடைபவணி பேரணியொன்றை நடாத்தியுள்ளனர்.

யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தினதும் அரசினதும் செயற்பாடுகளைக் கண்டித்தும் தமக்கான நீதியை வழங்க வேண்டுமென வலியுறுத்தியும் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கடந்த 10 நாட்களா தொடர்ச்சியாக வேலை நிறுத்த மேற் கொண்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக இன்று காலை அடையாள நடைபவணி போராட்டம் நடத்தினர்.

யாழ் பல்கலைக்கழக வளாகத்திற்க்குள் இருந்து பேரணியாக வந்த ஊழியர்கள் பிரதான நுழைவாயிலை வந்தடைந்தனர். அங்கிருந்து தொடர்ந்து பரமேஸ்வரா சந்திக்கு சென்ற நடைபவணி பலாலி வீதியின் நடுவில் நின்று தமது அடையாள போராட்டத்தை நடத்தினர்.

சுமார் அரைமணி நேரம் வீதியின் நடுவில் நின்று போராட்டம் நடத்தியதால் பலாலி வீதி போக்குவரத்தில் சிறிது நெருக்கடி ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post