யாழில் அதிபர்கள் கைதில்லை!! -இலஞ்ச விசாரணை நடக்கிறதாம்- - Yarl Thinakkural

யாழில் அதிபர்கள் கைதில்லை!! -இலஞ்ச விசாரணை நடக்கிறதாம்-

யாழ்.இந்துக்கல்லூரி பாடசாலை அதிபர் உட்பட வேறு எந்த பாடசாலை அதிபரும் கைது செய்யப்படவில்லை எனவும், இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அதிபர்கள் மீது விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் வடமாகாண கல்வி அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

யாழில். உள்ள பிரபல பாடசாலை, அச்சுவேலி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்று உட்பட சில பாடசாலைகளில் மாணவர்களை இணைப்பதற்கு அதிபர் பணம் கோரினார் என பெற்றோரால் முறைப்பாடுகள் செய்யப்பட்டன. அதில் காணொளி ஆதாரங்கள் உடன் கூட முறைப்பாடு கிடைக்கபெற்று உள்ளன.

அவற்றின் அடிப்படையில் பாடசாலை அதிபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நேற்றைய தினமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் அதிபர்கள் எவரும் நேற்றைய தினம் கைது செய்யப்படவில்லை.

குறித்த குற்றசாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருவதனால் , அவை குறித்த மேலதிக விபரங்களை தெரிவிக்க முடியாதுள்ளது. அவை விசாரணைகளை பாதிக்கும் என மேலும் தெரிவித்தார்.

Previous Post Next Post