கேட்டாக்கு ஆதரவு இல்லை!! -சந்திரிக்கா அதிரடி- - Yarl Thinakkural

கேட்டாக்கு ஆதரவு இல்லை!! -சந்திரிக்கா அதிரடி-

கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கியது பயங்கரமானது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சுமத்தினார்.

கோட்டாவுக்கு தாம் ஆதரவளிக்கப் போவதில்லை  எனவும் அவர் உறுதிபட கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், “நான் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளிக்கப்போவதாக பெசில் கூறியது பொய். ராஜபக்சர்கள் பேச்சை எவரும் நம்பப்போவதில்லை.” எனவும் தெரிவித்தார்.

மேலும், “காட்சியா? நாடா என்று வரும்போது ஸ்ரீ லாங்கா சுதந்திரக் கட்சியைவிட நாட்டுக்கே முன்னுரிமை கொடுப்பேன்.” எனவும் தெரிவித்துள்ள அவர், “கோட்டாவால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. ராஜபக்சர்கள் குடும்பத்திலிருந்து வேட்பாளரை தெரிவு செய்வதற்கு, அவர்களின் அதிகார பேராசையே காரணம்." எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Previous Post Next Post