வேட்பாளராக கோட்டா!! -யாழில் வெடி கொளுத்தி ஆரவாரம்- - Yarl Thinakkural

வேட்பாளராக கோட்டா!! -யாழில் வெடி கொளுத்தி ஆரவாரம்-

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதை ஆதரவாளர்கள் யாழில் வெடி கொழுத்தி கொண்டாடினர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.

இந்த மாநாட்டில், அக்கட்சியின் தலைமைத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார்.

அதனைத் தொடர்ந்து, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ களமிறங்கவுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ அறிவித்தார்.


இதனையடுத்து கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் இணைந்து யாழ் நகரில் வெடி கொழுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Previous Post Next Post