மக்களின் ஆதரவில்லாத கூட்டமைப்பு!! -எமக்கும் தேவையில்லை: பசில்- - Yarl Thinakkural

மக்களின் ஆதரவில்லாத கூட்டமைப்பு!! -எமக்கும் தேவையில்லை: பசில்-

அண்மையில் நடந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பெரும்பான்மையான ஆதரவைப் பெற்றுக் கொள்ளவில்லை. வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பை தவிர்ந்த தமிழ் மக்களின் ஆதரவை பெற்ற பல கட்சிகள் எங்களுடன் இணைந்து உள்ளார்கள். அந்த கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்போம்

மேற்கண்டவாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அமோக வெற்றியீட்டும். ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்கு முடிவுகட்டுவதில் நாட்டு மக்கள் உறுதியாக இருக்கின்றார்கள் எனவும் அவர் மேலும் கூறினார்.
Previous Post Next Post