வைத்தியர் சிவரூபன் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவால் கைது!! - Yarl Thinakkural

வைத்தியர் சிவரூபன் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவால் கைது!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முன்னாள் சட்டவைத்திய அதிகாரியும், பளை வைத்தியசாலையில் பொறுப்பதிகாயுமான மருத்துவ நிபுணர் சி.சிவரூபன் நேற்று இரவு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு 10 மணியளவில், பளை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் தங்கும் விடுதிக்கு சிவில் உடையில் வந்தவர்களால் அவர் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இராணுவத்தினரால் வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளதாக  அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ள போதும், சிவில் உடையில் வந்த பாதுகாப்பு தரப்பினராலேயே அழைத்து செல்லப்பட்டதாக

வைத்தியசாலை தரப்புக்கள் தெரிவிக்கின்றன. சில மாதங்களின் முன்னர் பளையில்  முன்னாள் போராளியொருவர் ஆயுதங்களுடன் கைதாகிய விவகாரத்தில்,

ஏற்கனவே அவரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்திருந்ததாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
Previous Post Next Post