யாழில் மீண்டும் ரவுடிகள் அட்டகாசம்!! -அரச உத்தியோகஸ்தரின் வீடு புகுந்து தாக்குதல்- - Yarl Thinakkural

யாழில் மீண்டும் ரவுடிகள் அட்டகாசம்!! -அரச உத்தியோகஸ்தரின் வீடு புகுந்து தாக்குதல்-

கொக்குவில் பொற்பதி பகுதியில் உள்ள வீட்டிற்கு நுழைந்த கும்பல் ஒன்று அங்கிருந்த பொருட்களை அடித்து நொருக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் நடைபெற்ற இச் சம்பவம் நடந்துள்ளது.

பொற்பதி வீதியில் முலாம் ஆம் ஒழுங்கையில் அரச உத்தியோகஸ்தருடைய கும்பத்தினர் வசிக்கும் வீட்டிற்கு 2 மோட்டார் சைக்கிலில் வந்திறங்கிய 6 பேர் கொண்ட கும்பல் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்துள்ளது.

அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து நொருக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இருப்பினும் வீட்டில் இருந்த எவருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை.

இச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post