வல்வை குமார் ஆனந்தன் நினைவாக நீச்சல் தடாகம்! -மங்கள திறந்து வைத்தார்- - Yarl Thinakkural

வல்வை குமார் ஆனந்தன் நினைவாக நீச்சல் தடாகம்! -மங்கள திறந்து வைத்தார்-

வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை பகுதியில்  அமைக்கப்பட்ட குமார் ஆனந்தன் நினைவு நீச்சல் தடாகம் இன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நீச்சல் தடாகத்தினை திறந்து வைத்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏசுமந்திரன், மாவை சேனாதிராஜா,  யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர்,  பிரதேச செயலர்கள் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளார்கள்.

2014 ஆம் ஆண்டு நிதி அமைச்சின் நிதி திட்டத்தின் கீழ் அடிக்கல் நாட்டப்பட்ட குறித்த நீச்சல் தடாகமானது இன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது குறித்த நிகழ்வில் மரம் நாட்டும் நிகழ்வும் இடம்பெற்றது.
Previous Post Next Post