இரகசியமாக திறக்கப்பட்ட காணாமல் போனோர் அலுவலகம்!! - Yarl Thinakkural

இரகசியமாக திறக்கப்பட்ட காணாமல் போனோர் அலுவலகம்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அமைக்கப்பட்ட காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் யாழ்.பிராந்திய அலுவலகம் இன்று சனிக்கிழமை காலை ஆடியபாதம் வீதியில் அவசர அவசரமாக திறந்து வைக்கப்பட்டது.

இவ் அலுவலம் திறப்பதற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்த நிலையிலேயே குறித்த அலுவகம் அவசரமாக திறக்கப்பட்டுள்ளது.

இல.124, ஆடியபாதம் வீதி கல்வியங்காடு என்ற முகவரியிலேயே குறித்த அலுவலகம் சம்பிரதாய பூர்வமாக திறக்கப்பட்டது.

இவ்வலுவலகத்தினை தலைவர் சாலிய பீரிஸ் திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post