நல்லூரில் இருந்து எழுக தமிழ் பரப்புரைகள் ஆரம்பம்!! - Yarl Thinakkural

நல்லூரில் இருந்து எழுக தமிழ் பரப்புரைகள் ஆரம்பம்!!

யாழ்.மாவட்டத்தில் நடைபெறவுள்ள எழுக தமிழ் எழுச்சி நிகழ்வுக்கான பரப்புரைகள் நல்லூர் முருகனின் ஆசீர்வாசத்துடன் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ் மக்கள் பேரவையினர் நல்லூர்;; ஆலயத்தில் செய்த விசேட வழிபாட்டுடன் இப் பரப்புரைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டடன.

எதிர்வரும் 16 ஆம் திகதி யாழில் நடைபெறவுள்ள எழுக தமிழ் எழுச்சி நிகழ்வுக்கான பரப்புரைகளில் ஈ.பீ.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள் தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Previous Post Next Post