மயிலிட்டி துறைமுகம்!! -பிரதமரால் திறந்து வைப்பு- - Yarl Thinakkural

மயிலிட்டி துறைமுகம்!! -பிரதமரால் திறந்து வைப்பு-

வலி.வடக்கில் உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்த மயிலிட்டி துறைமுகத்தின் முதற்கட்ட புணரமைப்பு பணிகள் நிறைவு செய்யப்பட்டு இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

உயர்பாதுகாப்பு வலையமாக இருந்த வலி.வடக்கில் மயிலிட்டி துறைமுகம் கடந்த 30 வருடமாக கடற்படையின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. குறித்த துறைமுகத்தை விடுவிக்க வேண்டும் என்று கோரி அந்த பகுதிக்குச் சொந்தமான மக்கள் பல போரட்டங்களை நடத்தியிருந்தனர்.
மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் குறித்த துறைமுகம் விடுவிக்க பட வேண்டும் என்று கோரிக்கைகளை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த துறைமுகம் மக்கடைய பாவனைக்காக அண்மையில் விடுவிக்கப்பட்டிருந்தது. இருந்த போதும் அத் துறைமுகத்தினை பயன்படுத்தி அப்பகுதி மக்கள் மீன்பிடியில் ஈடுபட முயாத நிலை காணப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த துறைகம் சுமார் 150 மில்லியன் ரூபாய் செலவில் முதற்கட்ட புனரமைப்பு பணிகளை 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் திகதி ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலமையில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த புனரமைப்பு பணிகளின் முதல் கட்டம் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், மேலதிக வசதிகளாக மீன்பிடி வலை தயாரிக்கும் நிலையம், சனசமூக நிலையம், எரிபொருள் நிரப்பு நிலையம் ஆகியவற்றுடன் அத்துறைமுகம் பொது மக்களின் பாவனைக்காக திறந்து விடப்பட்டது.

இத் துறைமுகத்தினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, துறைமுக புனரமைப்பு நினைவு கல்லினையும் இன்று காலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்தார்.
Previous Post Next Post