தேர்தல் ஆணைக்குழு கூடுகிறது!! - Yarl Thinakkural

தேர்தல் ஆணைக்குழு கூடுகிறது!!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இக் கலந்துரையாடலில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான சில முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக 2019 வாக்காளர் பெயர் பட்டிலில் உள்ளடக்கப்படவுள்ள ஏ.பி பட்டியலை வெளியிடும் தினம் தொடர்பில் இன்றைய தினம் தீர்மானம் எட்டப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெறவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தின் போது இது தொடர்பான தீர்மானம் எட்டப்படவுள்ளது.

2019 ஆம் வாக்காளர் பட்டியலை ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி அத்தாட்சிபடுத்த முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், வாக்காளர் படிவங்களை மீள கையளித்தல், அவற்றில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் திருத்தம் தொடர்பில் இன்றைய தினம் கலந்துரையாடி ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி அதனை அத்தாட்சிப்படுத்துவது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.

Previous Post Next Post