கேட்டாவே ஜனாதிபதி வேட்பாளர்!! -இன்று அறிவிப்பார் மஹிந்த- - Yarl Thinakkural

கேட்டாவே ஜனாதிபதி வேட்பாளர்!! -இன்று அறிவிப்பார் மஹிந்த-

மஹிந்த ராஜபக்சவினால் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச அறிவிக்கப்பவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த உத்தியோக பூர்வ அறிவிப்பு இன்று ஞாயிற்றுக் கிழமை வெளியிடப்படும் என்று  கோட்டாபய ராஜபக்சவின் ஊடகப் பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர், ஒரு வார காலத்துக்கு கோட்டாபய ராஜபக்ச நாடு முழுவதிலும் உள்ள மத வழிபாட்டு இடங்களுக்குச் செல்லவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய மாநாட்டில், அக்கட்சியின் தலைமைத்துவத்தை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்கவுள்ள மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பையும் வெளியிடவுள்ளார்.

இதேவேளை, கோட்டாபய ராஜபக்சவுக்கு நெருக்கமான உதவியாளர்கள், அவரது ஜனாதிபதித் தேர்தலுக்கான கொள்கை அறிக்கையைத் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post