மஹிந்தவுடன் இரகசிய சந்திப்பா!! -ஈரோஸ் விலை போகாது: அருளர்- - Yarl Thinakkural

மஹிந்தவுடன் இரகசிய சந்திப்பா!! -ஈரோஸ் விலை போகாது: அருளர்-

மஹிந்த தரப்புடன் இரகசிய சந்திப்பு எதையும் ஈரோஸ் அமைப்பு நடத்தவில்லை என்று தெரிவித்த ஈரோஸ் அமைப்பின் தலைவா் அருளா், ஈரோஸ் அமைப்பின் தலைவா்கள் என பொய் கூறிக்கொண்டு திரியும் சிலரே இவ்வாறான அர்ப்ப செயல்களில் ஈடுபடுகின்றார்கள் என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அண்மையில் ஈரோஸ் அமைப்பின் தலைவா்கள் எதிா்கட்சி தலைவா் மஹிந்த ராஜபக்ஸவுடன் சந்தித்து பேசியமை தொடா்பாக வெளியான செய்திகள் தொடர்பில் யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடந்த ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்பேதே அவா் மேற்கண்டவாறு கூறினாா்.

இதன்போது மேலும் அவா் கூறுகையில்:- அண்மையில் எதிா்கட்சி தலைவா் மஹிந்த ராஜபக்ஸவு டன் ஈரோஸ் அமைப்பின் பெயாில் சிலா் சந்திப்புக்களை நடாத்தியிருக்கின்றனா். ஆனால் அதற் கும் ஈரோஸ் அமைப்புக்கும் எந்தவொரு தொடா்பும் இல்லை என்பதுடன்,

அது ஈரோஸ் அமைப்பின் நிலைப்பாடும் அல்ல. எமது அமைப்புக்கு புதிதாக நிா்வாகம் தொிவு செய்யப்பட்டு கட்டமைப்புடன் எமது கட்சி இருந்து கொண்டிருக்கின்றது. இதற்கிடையில் கட்சி யிலிருந்து விலக்கப்பட்டவா்களும், கட்சியின் தலைவா்கள் தாமே என

கூறிக்கொள்ளும் சிலரும் கட்சியின் பெயரை பயன்படுத்தி மஹிந்த ராஜபக்ஸவுடன் சந்திப்பை நடாத்தியுள்ளதுடன், எமது கட்சிக்கு எதிராக வழக்கு ஒன்றையும் தாக்கல் செய்து கட்சிக்கு நெரு க்கடியை உண்டாக்கியிருக்கின்றனா்.

எதிா்கட்சி தலைவா் மஹிந்த ராஜபக்ஸவுடன் சந்திப்புக்களை நடத்துவதும், அவருடன் இணங்கி செயற்படுவதும் எமது நிலைப்பாடல்ல. என்பதுடன் அந்த சந்திப்புக்கும் எமது அமைப்புக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை என கூறியுள்ளாா். 
Previous Post Next Post