நல்லூலில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும்!! -கோருகிறார் சிறிதரன் எம்.பி- - Yarl Thinakkural

நல்லூலில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும்!! -கோருகிறார் சிறிதரன் எம்.பி-

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்தில் நடைபெறும் சோதனை நடவடிக்கைகள் இராணுவத்தாலும் மேற்கொள்ளப்படுவது ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு செயற்பாடாகும்.

நல்லூர் ஆலய நிர்வாகமோ அல்லது வேறு யாருமோ திருவிழா காலத்தில் அப்படி சோதனை செய்யுமாறு கேட்கவில்லை.

எமது கலாசாரத்தை புறக்கணிக்கும் வகையில் இப்படியான வேலைகள் நடப்பதால் இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேற வேண்டும்.

சஹ்ரானின் ஆட்களை பிடித்துவிட்டோம் பாதுகாப்பு எல்லாம் நல்லதென கூறும் அரசு தென்னிலங்கையில் இங்கே சோதனை நடவடிக்கைகளை நிறுத்தி வடக்கில் இப்படி செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே நல்லூர் கோவிலில் சோதனை என்ற பெயரில் நடத்தப்படும் பாதுகாப்பு கெடுபிடிகள் நிறுத்தப்பட வேண்டும் என்றார்.

Previous Post Next Post