யாழ்.பல்கலை மோதல் சம்பவம்!! -கைதான 7 சிங்கள மாணவர்களுக்கும் பிணை- - Yarl Thinakkural

யாழ்.பல்கலை மோதல் சம்பவம்!! -கைதான 7 சிங்கள மாணவர்களுக்கும் பிணை-

யாழ்.பல்கலைக்கழகத்தில் குழுவாக நின்று மோதலில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கைதான 7டி சிங்கள மாணவர்களுக்கும் யாழ்.நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட 2ஆம் மற்றும் 3ஆம் வருட மாணவர்கள் குழுவாக பிரிந்து நின்று கடந்த புதன்கிழமை மோதலில் ஈடுபட்டார்கள். இந்த மோதல் இரு தரப்பு மாணவர்களில் சிலர் தங்கியுள்ள விடுதிவரை நீடித்தது. சம்பவத்தில் சிங்கள மாணவர்கள் சிலர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், மாணவர்கள் சிலர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த மோதலுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் 7 சிங்கள மாணவர்களை கைது செய்தனர்.

அவர்கள் 7 பேரும் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி. போல் முன்னிலையில் இன்று முற்படுத்தப்பட்டனர். மாணவர்கள் மீதான குற்றச்சாட்டை ஆராய்ந்த நீதிவான், அவர்கள் 7 பேரையும் பிணையில் விடுவித்து வழக்கை ஒத்திவைத்தார்.
Previous Post Next Post