FCID இல் ஆஜரான ஹிஸ்புல்லா! - Yarl Thinakkural

FCID இல் ஆஜரான ஹிஸ்புல்லா!

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக இன்று வியாழக்கிழமை முற்பகல் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

அவர் சேகரித்த சொத்துகள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்காக இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.

முற்பகல் 10.15 அளவில் முன்னிலையான அவரிடம், தற்போது வாக்குமூலம் பதிவுசெய்யப்படுவதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post