தொடருந்து மோதி மாணவன் சாவு! - Yarl Thinakkural

தொடருந்து மோதி மாணவன் சாவு!

யாழிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட தபால் தொடருந்து மோதி பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி – பரந்தன் பகுதிக்கு இடையே நேற்றிரவு விபத்து நடந்துள்ளது.

கிளிநொச்சி பரந்தனைச் சேர்ந்த, பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற 14 வயதுடைய மாணவன் விபத்தில் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்த சிறுவனின் சடலத்தையும் ஏற்றிக் கொண்டு கிளிநொச்சி நிலையத்தைத் தொடருந்து வந்தடைந்தது. அங்கு வருகை தந்த பெற்றோர் சடலத்தை அடையாளம் காட்டினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Previous Post Next Post