போதையில் மோதல்! -இருவர் கைது- - Yarl Thinakkural

போதையில் மோதல்! -இருவர் கைது-

வவுனியா மாவட்டம் வேப்பங்குளம் 8ம் ஒழுங்கையில் இயங்கும் மதுபானசாலையில் மது அருந்திக் கொண்டிருந்த ஒரு சில நபர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு மோதலாக மாறியுள்ளது.

குறித்த நபர்கள் மதுபானசாலைக்குள் மோதலில் ஈடுபட்டிருந்ததுடன் வெளியிலும் மோதலில் ஈடுபட்டிருந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த நெளுக்குளம் பொலிஸார் அவ்விடத்தில் நிலவிய பதட்டத்தினை நீங்கியதுடன் மதுபானசாலையினை மூடுமாறு ஊழியர்களுக்கு வேண்டுகோள் விடுத்தமையினையடுத்து மதுபானசாலை இழுத்து மூடப்பட்டது.

அத்துடன் சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

குறித்த மதுபானசாலையில் தினசரி இவ்வாறான மோதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post