பொலிசாருக்கு டிமிக்கி குடுத்த நபர்! -நீதிமன்றில் இருந்து தப்பினார்- - Yarl Thinakkural

பொலிசாருக்கு டிமிக்கி குடுத்த நபர்! -நீதிமன்றில் இருந்து தப்பினார்-

யாழில் போதைப் பொருள் குற்றச்சாட்டில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மல்லாகம் நீதிமன்றத்தில் இருந்து தப்பித்து ஓடிய சம்பவம் இன்று மாலை நடைபெற்றது.

பொலிசாரால் போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிலையில் மல்லாகம் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த நபருக்கு 14  நாட்கள் விளக்கமரியலில் வைக்குமாறு உத்தரவு இடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நபர் நீதிமன்றத்தில் இருந்து பொலிசாருக் குடிமிக்கி கொடுத்து விட்டுதப்பி ஒடியுள்ளார்.

இதனை அடுத்து குறித்த சந்தேகநபரை பொலிசார் தேடிவருகின்றனர்.மேலும் தப்பி ஓடிய நபரை கைது செய்ய திறந்த பிடியானை உத்தரவினை நீதவான் பிறப்பித்து உள்ளார்.


Previous Post Next Post