தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளர் ஒருவர் மர்ம்மான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்.நெடுந்தீவு 5ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நடேசு.ஆனந்தகுமாரன் (கண்ணன்) (வயது-50 ) என்பவரே இவ்வாறு வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
அவரது வீட்டில் இருந்து நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டபோதும் இவர் எப்போது மரணமானர் என்பது குறித்து தெரியவில்லை.
சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளர் என்பதுடன் கடந்த தேர்தல்களில் கூட்டமைப்புக்காக செயற்பட்டவர்.
இவர் தனிமையில் வாழ்ந்து வந்தவர். இவர் வாழ்ந்த பகுதியில் இருந்த மக்கள் அனைவரும் புலம்பெயர்ந்து செல்ல இவர் தனிமையில் வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருடைய வீட்டிற்கு 200 மீற்றர் தூரத்திலேயே ஏனைய வீடுகள் காணப்படுகின்றன.