சுண்டுக்குளியை குண்டுவைத்து தகர்போம்! -யாழ்.ஜமாத் எச்சரிக்கை- - Yarl Thinakkural

சுண்டுக்குளியை குண்டுவைத்து தகர்போம்! -யாழ்.ஜமாத் எச்சரிக்கை-

யாழ்.சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு குண்டுத்தாக்குத் நடத்தப்படும் என்று எச்சரிக்சை செய்யப்பட்டு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தேசிய தௌஹீத் ஜமாத் – யாழ். மாவட்டம் என பெயரிடப்பட்ட இந்தக் கடிதம் தபால் ஊடாக அனுப்பிவைக்கப்பட்ட குறித்த கடிதம் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:-

இந்த தேசம் அல்லாவின் தேசம். இங்கு இஸ்லாமிய மக்கள் மட்டுமே வாழ முடியும். இது எமக்கான புனித பூமி. உங்களைப் போன்ற சிலுவை தூக்கிகளோ வேறு யாருமோ வாழ முடியாது. வாழ விடவும் மாட்டோம்.

அத்தோடு, 8.5.19 அன்று பாடசாலையில் குண்டு வைப்போம். எல்லா சிலுவை தூக்கி மாணவர்களையும் கொல்லுவோம். அல்லா மேல் ஆணை. எல்லாப் பாடசாலைகளும் குண்டு வைக்க ஜிகாதிகள் வந்துள்ளோம். இன்சா அல்ல, எங்கள் குடும்பத்தை அல்லா காப்பாற்றுவார் என்றுள்ளது.

இக்கடிதம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post