தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடையை நீடித்தது இந்தியா! - Yarl Thinakkural

தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடையை நீடித்தது இந்தியா!

இந்தியாவின் மத்திய அரசாங்கம் தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகள் நீடித்துள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு அதிகரித்து வருவதால் இந்த தடை நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் உள்துறை அமைச்சகம் நீடித்துள்ளது.

இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்கள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்காமல் தடுக்க தடை நீடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post