மோடியின் பதவியேற்பு! -இந்தியாவில் மைத்திரி- - Yarl Thinakkural

மோடியின் பதவியேற்பு! -இந்தியாவில் மைத்திரி-

நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவின் புது டில்லி நோக்கி பயணமானார்.

அண்மையில் இடம்பெற்ற இந்திய பொதுத்தேர்தலில் நரேந்திர மோடி அமோக வெற்றி பெற்று இரண்டாவது முறையாகவும் இந்திய பிரதமராக தெரிவுசெய்யப்பட்டார்.

இந்நிலையில், இந்திய பிரதமர் மோடியின் இரண்டாவது பதவியேற்பு வைபவம் புதுடில்லியில் ஜனாதிபதி மாளிகையில் இன்று 7 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவினர் இன்று அதிகாலை 8.20 மணியளவில் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தனது விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
Previous Post Next Post