-முழு அதிகாரத்தையும் பயன்படுத்துவோம்- இராணுவ தளபதி எச்சரிக்கை! - Yarl Thinakkural

-முழு அதிகாரத்தையும் பயன்படுத்துவோம்- இராணுவ தளபதி எச்சரிக்கை!

நாட்டில் வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக இராணுவம் தமது முழு அதிகாரங்களை பயன்படுத்தும் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க எச்சரித்துள்ளார்.

இராணுவத் தளபதியினால் விடுக்கப்பட்டுள்ள விசேட செய்தியிலேயே அவர் மேற்படி எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

அவ்வெச்சரிக்கை தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

தற்போது படையினர் நாட்டில் முழுமையான அமைதியை ஏற்படுத்தியுள்ளனர்.

ஒரு சிலரின் செயற்பாட்டினை கட்டுப்படுத்த இராணுவத்தினர் அதிகாரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

தேவை ஏற்படின் ஏனைய பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து தமது முழு அதிகாரத்தையும் பயன்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Previous Post Next Post